தமிழ்நாட்டில் அரசு கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை சம்பந்தமாக - உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசு கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை சம்பந்தமாக - உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது.

மாணாக்கர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் "TNGASA 2023-UG VACANCY"- என்ற தொகுப்பில் காணலாம்.

அரசு முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments