கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதி மக்களுக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரின் வேண்டுகோள்!கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதி மக்களுக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அவுலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை பள்ளி வளாகத்தின் வெளியிலும், சிலர் பள்ளி வளாகத்திலும் கொட்டி வருகின்றனர். மேலும் நேற்று இறந்த நிலையில் கோழியை பள்ளி வளாகத்தில் வீசியுள்ளனர். 

இதனால் பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசியதுடன், மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் பள்ளி வளாகம் மற்றும் அருகில் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிக்கூட வளாகத்தை சுற்றி வசிக்கக்கூடிய மக்கள் குப்பைகளை பள்ளிக்கூட வளாகம் மற்றும் பள்ளிக்கூடம் அருகில் கொட்ட வேண்டாம் என பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments