கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு!கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் மதுராபுரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக கருப்பையா, துணைத்தலைவராக பொன் விஜயன் ஆகியோர் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தி.மு.க. வார்டு உறுப்பினராக உள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வராமல் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா புறக்கணித்தார். துணைத்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தி.மு.க.வை சேர்ந்த கருப்பையா சபை கூட்டத்தை புறக்கணித்தது சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டு காலத்தில் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றவில்லை. சாலை வசதி, உள்பட எந்த வசதியும் நிறைவேறவில்லை. இதை அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் ஒரு சதவீத பணியை கூட செய்ய அரசு நிதி ஒதுக்கவில்லை. அரசு அதிகாரிகள் மெத்தன போக்கே இதற்கு காரணமாக உள்ளது. மேலும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இல்லாமல் சாலையில் நின்று தான் எழுத்துப் பணிகளை நிறைவேற்றி வருகிறோம். வேண்டுமென்றே எங்கள் ஊராட்சியை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து கிராம சபை கூட்டத்திற்கு செல்லாமல் நானும் துணைத் தலைவரும் புறக்கணித்தோம். 

ஆனால் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் துணைத்தலைவர் மட்டும் சென்று கூட்டத்தை நடத்தினார். ஆளுங்கட்சியில் இருந்தாலும் ஊராட்சி தலைவர்களுக்கு எந்த விதமான நிதியும் ஒதுக்காமல் எந்தவித அடிப்படை பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனது பகுதி மக்களுக்கு எந்த சேவையும் செய்ய முடியாமல் வேதனையாக உள்ளது. மாவட்ட கலெக்டர் நிதி ஒதுக்கி பணிகள் விரைந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments