புவனேஸ்வர்⇋ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் அடுத்த 2 வாரங்களுக்கு முழுவதும் ரத்து!
புவனேஸ்வர்⇋ராமேஸ்வரம்  வாராந்திர அதிவிரைவு ரயில்  2 வாரங்களுக்கு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

20896 புவனேஸ்வர்-ராமேஸ்வரம்

வண்டி எண் 20896 புவனேஸ்வர் - இராமேஸ்வரம் வாரந்திர அதிவிரைவு ரயில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மதியம் 12.10 மணிக்கு புவனேஸ்வரத்தில் புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை இரவு 11.40 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும் 

20895 இராமேஸ்வரம் - புவனேஸ்வர் 

வண்டி எண் 20895 இராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாரந்திர அதிவிரைவு ரயில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 08.40 மணிக்கு இராமேஸ்வரத்தில் புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை மாலை 06.10 மணிக்கு புவனேஸ்வர் சென்றடையும்

குறிப்பு: தற்போது இராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலம் வேலைகள் நடைபெற்று வருவதால் புவனேஸ்வர் - இராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாரந்திர ரயில் இராமநாதபுரம் வரை மட்டுமே செல்லும், இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்

இரு வாரங்களுக்கு ரத்து
 
கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் ஒடிசா மாநிலம் குர்தா ரோடு ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் இன்டர்லாக்கிங் பணிகள் காரணமாக 

➽20896/புவனேஸ்வர்-ராமேஸ்வரம்  வாராந்திர ரயில் ஆகஸ்ட் 18 & 25 ஆகிய தேதிகளிலும் 

➽20895/ராமேஸ்வரம்-புவனேஸ்வர் வாராந்திர ரயில் ஆகஸ்ட் 20 & 27 ஆகிய தேதிகளிலும் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

புவனேஸ்வர் - இராமேஸ்வரம் ரயில் வழித்தடம்

குர்தா ரோடு,
பிராம்பூர்,
விஜயநகரம்,
விசாகப்பட்டினம்,
தூவாடா,
விஜயவாடா,
நெல்லூர்,
கூடூர்,
சென்னை எழும்பூர்,
விழுப்புரம்,
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),
சிதம்பரம்,
சீர்காழி,
மயிலாடுதுறை,
கும்பகோணம்,
தஞ்சாவூர்,
திருச்சி,
புதுக்கோட்டை,
காரைக்குடி,
தேவகோட்டை ரோடு,
சிவகங்கை,
மானாமதுரை,
பரமக்குடி,
இராமநாதபுரம் 

தமிழகம் வரும் பல ரயில்கள் ரத்து

இதுமட்டுமல்ல 

திருச்சி - கொல்கத்தா ஹவுரா - திருச்சி  

கன்னியாகுமரி - கொல்கத்தா ஹவுரா-கன்னியாகுமரி  

புதுச்சேரி - கொல்கத்தா ஹவுரா - புதுச்சேரி 

புதுச்சேரி- புவனேஸ்வர் -புதுச்சேரி 

விழுப்புரம் - புருலியா - விழுப்புரம் 

விழுப்புரம்‌ - காரக்பூர் -  விழுப்புரம் 

என ஒடிஷா மாநிலத்தின் குர்தா ரோடு கோட்டம் வழியாக கடந்து செல்லும் அனைத்து ரயில்களுக்கு  2 வாரங்களுக்கு முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments