கோலேந்திரத்தில் மதரஸத்துல் ஹுதா புதிய பெண்கள் மதரஸா திறப்பு!கோலேந்திரத்தில் மதரஸத்துல் ஹுதா புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் கோலேந்திரம் கிராமத்தில்  150 க்கும் மேற்பட்ட  முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர்.

மிக பிரம்மாண்டமான பள்ளிவாசல் இருக்கும் நிலையில் பெண்களுக்கு போதிய மார்க்க கல்வியை கற்றுக்கொள்ள பெண்கள் மதரஸா இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 16/08/2023 புதன்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் மதரஸத்துல் ஹுதா பெண்கள் மதரஸா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மதரஸா பொருப்பாளரும் பள்ளிவாசல் செயலாளருமான P.சேக் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தி, பள்ளியின் இமாம் மௌலவி அப்துல் ரஷீத் கைரி மற்றும் கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி A.அப்துல்லா அன்வாரி ஹஜரத் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்னர் ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மதரஸா தலைமை ஆசிரியர் மௌலவி.பாஜில் காரி, J.முகமது மைதீன் தாவூதி அவர்கள், பாடத்திட்ட விளக்கங்கள் மற்றும் பாடம் நடத்தும் முறைகளை சொல்லி பாடத்தை துவக்கி வைத்தார்கள். 

இந்நிகழ்வில் ஜமாஅத்தார்களும், உள்ளூர் பெண்களும் பலர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments