கோபாலப்பட்டிணம்,மீமிசல் பகுதிகளில் கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பொதுமக்கள் அவதி




கோடைகாலம் முடிந்த நிலையிலும் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம, மீமிசல் பகுதிகளில்  கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைகால சீசன் ஆகும். இந்த 4 மாதங்களில் இயல்பாகவே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஜூலை மாதம் பிறந்த பின்னர் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து பெரும்பாலான ஊர்களில் இதமான காற்று வீச தொடங்கி விடும். அதிலும் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி விடுவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு மழையும் பெய்ய தொடங்கிவிடும். 

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடைகாலம் முடிந்தும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த 1 மாதத்திற்கு மேலாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது

 பொதுமக்கள் அவதி

 மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு அனல் காற்றின் தாக்கம் இருந்து வருகின்றது. சாலை முழுவதும் தண்ணீர் ஓடுவது போல் கானல் நீர் தெரிகின்றது.
 
மீமிசல் கோட்டைப்பட்டிணம் ஜெகதாப்பட்டிணம் அம்மாப்பட்டிணம் மணமேல்குடி கட்டுமாவடி மற்றும் புதுக்கோட்டை என மாவட்டம் முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. 

கடும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆறுதலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments