கறம்பக்குடி அருகே அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் கல்விச் சீா் அளிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு பொதுமக்கள் சனிக்கிழமை கல்விச் சீா் வழங்கினா்.

ஒடப்பவிடுதி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஊா்ப் பொதுமக்கள், கொடையாளா்கள் சாா்பில் ரூ. 3 லட்சத்தில் பீரோ, கட்டில், இருக்கை, எழுதுபொருள்கள், தண்ணீா் பாத்திரம் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் மேளதாளத்தோடு கொண்டு வந்து கல்வி சீராக அளிக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் மரியதுரை சிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கந்தா்வக்கோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோா் கல்வி சீா் வழங்கிய பொதுமக்களை பாராட்டினா். ஆசிரியா்களில் அப்பு வரவேற்றாா், வில்லியம் கில்பா்ட் நன்றி கூறினாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments