கோட்டக்குப்பம் சாலையில் மாடுகளை திரிய விட்டால் 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் - கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!



கோட்டக்குப்பம் சாலையில் மாடுகளை திரிய விட்டால் 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையாளர்   எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் ECR சாலை, MG ரோடு, சின்னகோட்டக்குப்பம், பழைய பட்டினம் பாதை பள்ளிவாசல் தெரு மற்றும் இதர பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தெருக்களில் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு விபத்துகள் உண்டாக காரணமாகவும் அறியப்படுகிறது.

மேலும் வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொலைபேசி வாயிலாகவும் மற்றும் மனுக்கள் வாயிலாகவும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்திட கோரியுள்ளனர், மேற்கண்ட சூழ்நிலையில் கோட்டக்குப்பம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களது வீடுகளிலேயே அல்லது விவசாய நிலங்களிலேயே கட்டி வளர்க்க வேண்டும் மீறி மாடுகள் சாலை / தெருவில் சுற்றி திரிந்தால் மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது அபராதம் ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) வசூலிக்கப்படுவதுடன் காவல் நிலையத்தில் புகார் செய்து சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நகராட்சி சார்பில் மாடுகள் பிடிக்கப்பட்டு அதனை ஏலம் விடுதல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுறிது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments