தொண்டி பேரூராட்சியில் கொசுக்களால் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் வீடு,வீடாக ஆய்வு






வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் டிரம்களில் கொசுக்கள் ஏதும் உற்பத்தியாகி உள்ளதா என சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் கொசுக்களால் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் வீடு,வீடாக ஆய்வு செய்தார்.

பரவும் காய்ச்சல்

தொண்டி பேரூராட்சி பகுதிகளில் மகாசக்திபுரம் படையாட்சி தெரு, கடற்கரை சாலை, எம்.ஜி.ஆர். நகர் போன்ற பகுதிகள் உள்பட பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன் குமார் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
 
அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர் டாக்டர்கள், செவிலியர் மற்றும் மருத்துவமனை பணியாளர்களிடம் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் எம்.ஜி.ஆர். நகர், கடற்கரை சாலை, படையாட்சி தெரு, மகாசக்திபுரம் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அங்கு பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்துள்ள பாத்திரங்களில் கொசு உற்பத்தி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தார்.

அப்போது பொது மக்களிடம் பாத்திரங்களில் சேமித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும். பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.

குடிநீர் தொட்டி

பின்னர் மகாசக்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். அதன் பின்னர் பகுதியில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடுகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், தரைமட்ட குடிநீர் தொட்டிகளையும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.

மேலும் டெங்கு மஸ்தூர் பணியாளர்களிடம் கொசு உற்பத்தியை தடுப்பதற்கு எவ்வாறு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், அப்போது பொதுமக்களிடம் காய்ச்சல் அறி–னகுறி தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம் என அறிவுரை கூறினார்.

ஆய்வின் போது பூச்சியியல் வல்லுனர் வேலுச்சாமி, உதவி பூச்சியியல் அலுவலர் சேக் தாவுது, மருத்துவ அலுவலர் அருண் குமார், வட்டார சுகதார மேற்பார்வையாளர் சந்தனராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments