காரைக்குடி - திருவாரூர் - சென்னை கம்பன் எக்ஸ்பிரசை மீண்டும் இயக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் வலியுறுத்தல்



 




திருவாரூர் காரைக்குடி தடத்தில் மீட்டர்கேஜ் காலத்தில் இயக்கப் பட்டு வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் தினமும் காரைக்குடியில் புறப்பட்டு அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை, திருத் துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு இரவில் இரு மார்க் கத்திலும் இயக்கப்பட்டு வந்தது.

கம்பர் பிறந்ததாக கருதப்படும் மயிலாடுதுறை, குத்தாலம் அருகே யுள்ள தேரழுந்தூர், அவரது நினை விடம் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கருதுப்பட்டியை கருத்தில் கொண்டே கடந்த 1980 களில் காரைக்குடி திருவாரூர், மயிலாடுதுறை வழியாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் பெயரில் கப்பட்டது. அதே காலகட்டத்தில் நாகூரிலிருந்து இயக்கப்பட்ட நாகர் ஆண்டவர் ரயிலும், காரைக்குடியில் இருந்து வரும் வந்த ரயிலும்
இணைக்கப்பட்டு கம்பன் எக்ஸ்பிரஸாக இயக்கப்பட்டது என்பதே உண்மை திருவாரூரில் பிறந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ரயில் ஆர்வலர். அவர் அரசியல் அன்னை அஞ்சுகம் அம்மையாருக்கு அஞ்சலி செலுத்த ஆரூர் வருகையில் கம்பன் ரயிலில் தான் அதிகம் பயணித்து வந்துள்ளார்.

திருவாரூர் காரைக்குடி பிரிவு அகலப்பாதை மாற்றத்தினால் ரயில்  சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில் கம்பன் எக்ஸ்பிரஸானது இப்போது சென்னையிலிருந்து காரைக்கால் வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் காரைக்குடி பிரிவு அகல ரயில் பாதை பணிகள் முடிந்து போதிய பணியாளர்களும் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில் கம்பன் எக்ஸ்பிரஸை காரைக்குடியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு இரு மார்கத்திலும் இயக்க வேண்டும்.

கருணாநிதியின் நினைவாக காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் போலவே கம்பன் எஸ் பிரஸ் கருணாநிதி நினைவுகளோடு கலந்த ஒன்றாகும். எனவே கம்பன் ரயில் மீண்டும் காரைக்குடியிலி ருந்து சென்னைக்கு இயக்கப்பட வேண்டும்.

மேலும் திருவாரூரில் ரயில்களுக்கான முதன்மை பணிமனை அமைக்கவும், ராமேஸ்வரத்திலிருந்து, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கவும் முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

News Courtesy: Dinamalar 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments