அதிராம்பட்டினத்தில் தமுமுக-வின் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம்!அதிராம்பட்டினத்தில் தமுமுக-வின் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அதிராம்பட்டினம் நகர கிளை சார்பாக 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7.00 மணியளவில் மாபெரும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நகரத் தலைவர் H.செய்யது புகாரி தலைமையில் நடைபெற்றது. 
இதில் தமுமுக நகர செயலாளர் முனைவர்.H.ஷேக் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை கிராத் ஓதி ரப்பான் அவர்கள் சிறப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் H.நஸ்ருதீன் சாலிக், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். துவக்க உரை ஆற்றிய மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A. அப்துல் மாலிக்,24 வது வார்டு மமக நகர்மன்ற உறுப்பினர். இதில் முதல் சிறப்புரை ஆற்றிய வழக்கறிஞர். தஞ்சைI.M. பாதுஷா, மாநில துணை பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி அவர்கள்இன்றைய காலத்தில் தமுமுகவின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். 
இரண்டாவது சிறப்பு உரையாற்றிய தாம்பரம் M. யாக்கூப், மாநில துணைப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தாம்பரம் 50 வது மமக மாமன்ற உறுப்பினர், சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார் மற்றும் மூன்றாவது ஆக சிறப்புரை ஆற்றிய பழனி. M.Iபாருக்,மாநில அமைப்பு செயலாளர், மனித நேய மக்கள் கட்சி, பெண் உரிமை மீட்போம், சமுதாயம் காப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக மனிதநேய மக்கள் கட்சி நகர துணைச் செயலாளர் A.நசுருதீன் நன்றியுரை ஆற்றினார் உரையாற்றினார்.


தீர்மானங்கள்:

1.அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரம் பணியாற்றிட மருத்துவரை விரைவில் அமைக்க வேண்டும், இந்த அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி தரப்பட வேண்டும்.

2.ரயில் சேவையை அதிராம்பட்டினம் மார்க்கத்தில் அதிகரிக்க வேண்டும் மேலும் தாம்பரம் செங்கோட்டை ரயில் தடம் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

3.தமிழக சிறைகளில் உள்ள நீண்ட நாள் ஆயில் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

4.குழந்தை பிறப்பு குறித்து பதிவு செய்வதற்காக பி.ஐ.சி.எம்.ஐ என் பெறுவதற்கு அதிரை கற்பிணி பெண்கள் தற்போது ராஜா மடம் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டிய உள்ளது. இந்த வசதியை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

5.அதிராம்பட்டினத்தை தாலுகாவாக அரசு விரைந்து அறிவிக்க வேண்டும் என இப்போது கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

6.சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றி தெரியும் மாடு, நாய், ஆடு, போன்ற கால்நடைகளை அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என இப்போது கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

7.அதிராம்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தீயணைப்பு நிலையத்தை அதிராம்பட்டினத்தில் அமைக்க தமிழக அரசை இப்போது கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

8.அதிராம்பட்டினத்தில் அடிக்கடி நிலவும் மின்தடையை சரி செய்து தடையில்லாமல் சேவையை வழங்க வேண்டும் என இப்போது கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

9.அதிராம்பட்டினத்தில் இருந்து மதுரை செல்வதற்கு ஏற்ப அதிராம்பட்டினத்தில் இருந்து நேரடியாக மதுரைக்கு பேருந்து இயக்க வேண்டும் என தமிழக அரசை இப்போது கூட்டம் வலியுறுத்துகிறது.

10.மத சுதந்திரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரான பொதுச் சிவில் சட்டத்தை இப்போது கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

News Credit: Adirai Express 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments