நாட்டிலேயே முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவுக்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள வளமாவூரில், மீன்வளத் துறை சார்பில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார்.
தமிழக மீன்வளத் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி வரவேற்றுப் பேசும்போது, “மத்திய அரசு ரூ.78.77 கோடி, தமிழக அரசு ரூ.48.94 கோடி பங்களிப்புடன் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 15 ஆயிரம் டன் கடற்பாசி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பூங்கா அமைந்த பின்னர் 49 ஆயிரம் டன் கடற்பாசி உற்பத்தி செய்யப்படும்” என்றார்.
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அடிக்கல்நாட்டிப் பேசியதாவது: நாட்டிலேயே முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் கடற்பாசி பூங்கா அமைக்கப்படுகிறது. பிரதமர் மோடி தொலை நோக்குப் பார்வையுடன், மீனவப் பெண்களுக்காக இந்த கடற்பாசிப் பூங்காவை நிறுவியுள்ளார்.
ரூ.127.71 கோடியில் அமையும் இந்தப் பூங்கா மூலம், 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீனவப் பெண்கள் பயனடைவர். இந்தப் பூங்கா கட்டுமானப் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளைப் போல, மீனவர்களுக்கும் கிஷான் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 374 பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டு, ரூ.4.71 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா அமைக்கப்பட்டதும் மீனவர்களுக்கு கடற்பாசி விதை வழங்குதல், பயிற்சி அளித்தல், சந்தைப் படுத்தல் போன்ற பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மத்திய முன்னாள்அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மத்திய மீன்வளத் துறை இணைச் செயலர் நீத்து பிரசாத், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், உதவி ஆட்சியர்(பயிற்சி) சிவானந்தம், பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், மண்டலப் பொறுப்பாளர் முரளிதரன் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தை மத்திய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா. எல்.முருகன் பார்வையிட்டு, மீனவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.