கலைஞா் மகளிா் உரிமைத் தொகை: எளிதில் அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கலாம்
கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில், நிதியுதவியைப் பெற ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், மிக எளிய நடைமுறைகளுடன் அஞ்சலக சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கலாம் என புதுக்கோட்டை கோட்ட கண்காணிப்பாளா் பி. முருகேசன் அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமை தொகை பெற ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம். எனவே, தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது அஞ்சல் கொண்டு அஞ்சலா், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, பயோமெட்ரிக் சாதனம், ஆதாா் மற்றும் செல்லிடப்பேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதாா் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க முடியும்.

இந்தக் கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் கிடையாது. மாதாந்திர உரிமைத் தொகையை, அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், வீட்டு வாசலியேயும் அஞ்சல் அலுவலா் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments