நாகூரில் இந்தியன் ரயில்வே கருத்தரங்கு




நாகூரில் இந்தியன் ரயில்வே கருத்தரங்கு;  நாகூர் கிரசண்ட் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது

  நாகூர் -நாகப்பட்டினம் இரயில் உபயோகிப்போர் நலச்சங்கம், நாகூர் கிரசெண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாகூர் சித்திக் சேவை குழுமம் தர்ம அறக்கட்டளை  சார்பில் இந்தியன் ரயில்வே கருத்தரங்கு 7/9/23 அன்று  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

நாகூர் தர்கா அறங்காவலர் ஜனாப், S,செய்யது முஹம்மது காஜி,ஹுசைன் சாஹிப் Bsc,M,A தலைமையிலும், நாகூர் - நாகப்பட்டினம் இரயில் உபயோகிப்போர் நல சங்கம் செயலாளர் திரு சித்திக்  வரவேற்புரை நிகழ்த்தினார். கிரசெண்ட் பெண்கள்பள்ளி முதல்வர் ஜனாபா, S,ராபியத்து பஜ்ரியா MSC, BEd, பள்ளி மேலாளர் ஜனாப், A,குலாம்சா மரைக்காயர் நாகை நகரமன்ற துணைத் தலைவர் திரு,Rtn,M,Rசெந்தில் குமார் , நாகூர்- நாகப்பட்டினம் இரயில் உபயோகிப்போர் நலசங்கம் தலைவர் திரு, நாகை S, மோகன், பொருளாளர் திரு, NPS, பாலா,துணைத்தலைவர்Rtn,A,முஹம்மது தம்பி,ஜனாப்,H,சேக்
தாவுது@ அமான்,M,C, மந்திராலயம் திரு சரவணண்,  நடராஜன் தமயந்தி திரு முருகேசன்,  திரு NC ரவி,   காரை,திரு,T இளங்கோசிவம், நாகூர் சித்திக் சேவைக்குழுமம் தர்ம அறக்கட்டளையைச் சார்ந்த திரு,R,சேகர்,M,A, திரு,பா, ராமச்சந்திரன், திரு, நா, பாலமுரளி, திரு, ந, ராமசாமி,திரு, மரங்கள், பா, சௌந்தர்ராஜன்,
மந்ராலயம் திரு, S, சரவணன், திரு, S, முருகையன் சாமி,ஆகியோர்  முன்னிலை வகிக்கவும், திரு M. ஹரிக்குமார் IRTS முதன்மை கோட்ட இயக்கவியல் மேலாளர் திருச்சிராப்பள்ளி அவர்கள் சிறப்பு கருத்தரங்கு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளிடையே இந்திய  ரயில்வே  போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு  வழங்கினார். பள்ளி மாணவிகள் உற்சாகமாக இரயில்வே சம்பந்தமாக கேள்விகளை கேட்டனர். சீர்காழி இரயில் உபயோகிப்போர் நல சங்கம் தலைவர், ஜனாப்,A, முஹம்மது முஸ்தபா, முத்துப்பேட்டை ரயில் நலசங்கம் ஜனாப், சுனா,இனா ஹாஜியார், ஜனாப் , சஜ்ஜாத் அலி, மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசிரியைகள், அரங்க ஒருங்கிணைப்பாளர், பள்ளி அலுவலர்கள், 
300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.



பள்ளி வளாகத்தில் மழைச்சாரல் மரங்கள் வளர்ப்பு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சீர்காழி, முத்துப்பேட்டை ரயில் சங்க இயக்கதினர்கள் சிறப்பு விருந்தினருக்கு நன்றி கூறினர். 

கீழ்கண்ட ரயில் சேவைகள் தேவை என கேட்டு கொள்ளப்பட்டது:- 

பகலில் தாம்பரம் வரை தினசரி  விரைவு இரயில் காரைக்காலில் இருந்து, ஜன சதாப்தி ரயிலுக்கு இரு பக்கமும் மீண்டும் தஞ்சையில் மாற ரயில் வசதி,  வண்டி எண்.  6612/6611 ஈரோடு - திருச்சி - ஈரோடு நீட்டிப்பு மற்றும் வேளாங்கண்ணி - நாகை - வேளாங்கண்ணி டெமோவை 6842/6841  திருச்சி வரை இரவில் விரைவு ரயிலாக இயக்கவும் கேட்டு கொண்டார்கள் 

அதற்கு Sr. Dom/tpj முதற்கட்டமாக ஈரோடு - திருச்சி - ஈரோடு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க ரயில்வே வாரிய ஒப்புதல் (6612 / 6611)  எதிர்பார்க்கப்படுகிறது .  ஒப்புதல் கிடைத்தவுடன் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும் என்றார்.  மேலும் பேரளம் - காரைக்கால் 23 கீமி திறந்தவுடன் தான் இப்பகுதிக்கு மாற்றங்கள் ஏற்படும் என்றார்.  தற்போது காரைக்கால் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் தான் உள்ளது. இதுவும் மற்றும்  நாகை - வேளாங்கண்ணி செல்ல இஞ்சினை கழட்டி மாற்ற வேண்டியுள்ளதால் இயக்குவதில்  சிரமமாக உள்ளது  என்றார்.   ஆகவே நிரந்தர தீர்வு பேரளம் - காரைக்கால் முடிந்தவுடன் எதிர்பார்க்கலாம் என்றார். நம் பகுதிக்கான நாம் எதிர் பார்க்கும் விரைவில் இரயில்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளியின் துணை முதல்வர் திருமதி, சியாமளா அவர்கள் நன்றி கூற நாட்டுப்பண் முழங்க கருத்தரங்கம் இனிதே நிறைவேறியது.

News & Pc Credit: நாகூர் -நாகப்பட்டினம் இரயில் உபயோகிப்போர் நலச்சங்கம்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments