திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் கீரனூரில் மீண்டும் நின்று செல்லும்






திருச்சி-ராமேசுவரம் இடையே தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பயணிகள் ரெயிலாக இருந்த போது கீரனூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது. விரைவு ரெயிலானதை தொடர்ந்து கொரோனா பரவலுக்கு பின் கீரனூர் ரெயில் நிலையத்தில் இந்த ரெயிலுக்கு நிறுத்தம் வழங்கப்படவில்லை. இதனால் கீரனூரில் இந்த ரெயில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 

இந்த நிலையில் திருச்சி-ராமேசுவரம்-திருச்சி விரைவு ரெயில் கீரனூர் ரெயில் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி முதல் நின்று செல்லும் என தகவல் வெளியாகி உள்ளது. 

திருச்சி - இராமேஸ்வரம் 

திருச்சியில் இருந்து தினமும் காலை 7.05 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் கீரனூர் ரெயில் நிலையத்திற்கு காலை 7.27 மணிக்கு வந்து காலை 7.28 மணிக்கு புறப்படும். 

இராமேஸ்வரம் - திருச்சி 

மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு வரும் ரெயில் கீரனூருக்கு இரவு 7 மணிக்கு வந்து இரவு 7.01 மணிக்கு புறப்படும். பாம்பன் பாலப்பணி காரணமாக தற்போது இந்த ரெயில் ராமநாதபுரம் வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் கீரனூரில் மீண்டும் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியானது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கீரனூர் மக்களுக்கு ஒரு நற்செய்தி!

திருச்சி-ராமேஸ்வரம்-திருச்சி ரயிலுக்கு கீரனூர் ரயில் நிலையத்திற்கு மீண்டும் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. 

வரும் 20/09/23 முதல் 
16849/திருச்சி-ராமேஸ்வரம் விரைவு ரயில்(தினசரி)

➧திருச்சி- 07:05 am (காலை)
➧#கீரனூர்-07:27/07:28 am (காலை)
➧புதுக்கோட்டை- 07:53 am
➧ராமநாதபுரம்-10:43 am

வரும் 20/09/23 முதல் 
16850/ராமேஸ்வரம்-திருச்சி விரைவு ரயில்(தினசரி)

➧ராமநாதபுரம்-03:35 pm (மதியம்)
➧புதுக்கோட்டை- 06:35 pm 
➧#கீரனூர்-07:00/07:01 pm(இரவு)
➧திருச்சி- 08:05 pm(இரவு)

கொரோனா பரவலுக்கு பிறகு இந்த ரயிலுக்கு கீரனூர் ரயில் நிறுத்தத்திற்கு போதிய பயணிகள் பயன்பாடு இல்லை என்ற காரணத்தினால் இந்த நிறுத்தம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. கீரனூர் மக்கள் தினசரி திருச்சி, புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, உச்சிப்புளி, ராமநாதபுரம் செல்ல இந்த ரயிலை ஆக்கபூர்மாக பயன்படுத்திக்கொள்ளவும்.

News Credit: Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments