வைகை ஆறும் கடலும் இனைக்கூடிய ஆற்றாங்கரை கடலில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு




ஆற்றங்கரை‌ ஊராட்சிமன்ற தலைவர் டாக்டர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு பணிகள்

09.09.2023 அன்று ஆற்றங்கரை ஊராட்சி மீனவர் குறைகள் மற்றும் மனு பெற மாவட்ட ஆட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு விஷ்ணு சந்திரன்.இ.ஆ.ப அவர்கள் வருகை புரிந்தன ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் வைகை ஆறும் கடலும் இணைய கூடிய முகத்துவார பகுதியில் கிழக்கு பகுதியில் 1.20 திட்ட மதிப்பீட்டில் ஆழப்படுத்தி கற்கள் அமைக்கப்பட்டது மேற்கு பகுதியில் ஆளப்படுத்தி கற்கள் அமைத்துக் கொடுத்தால்தான் மீனவர்கள் படகு எளிதில் சென்று வர ஏதுவாக இருக்கும் இன்ஜினியரிங் கருத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர், மீனவர்கள் விளக்கி கூறப்பட்டது மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு பணி மேற்கொண்டார்கள்

அதனைத் தொடர்ந்து இன்று 14.09.2023  மீன்வளத்துறை அதிகாரிகள் துணை இயக்குநர் திருமதி MV பிரபாவதி,உதவி இயக்குநர்(வடக்கு)திரு கோபிநாத் மற்றும் திரு.காளீஸ்வரன்,பொறியாளர்(வடக்கு) திரு பாலசுப்பிரமணியன் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விவரத்தை எடுத்து கூறினார் கள் 

வைகை ஆறும் கடலும் இணையக்கூடிய முகத்துவார பகுதியை மேற்கு பகுதியை ஆளப்படுத்தி கற்கள் அமைக்க ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முஹம்மது அலி ஜின்னா மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.நூருல் அஃபான் அவர்கள் முதல்வர் முகவரிக்கு மனு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப்பு மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர் வலியுறுத்தல் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறார் கள் விரைவில் தமிழக அரசு நிதி ஒதுக்கி மக்களின் கோரிக்கையை விரைந்து செயல்படுத்த ஊராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்து வருகின்றது....

தகவல்;ஊராட்சி மன்ற அலுவலகம்,ஆற்றங்கரை






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments