முத்துப்பேட்டையில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் நின்று செல்ல வேண்டும் முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்போர் சங்க நிர்வாகிகள் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்




முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, செப்டம்பர் 12ம் தேதி முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்போர் சங்க நிர்வாகிகள் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்போர் சங்க நிர்வாகிகள் ஜெர்மன் அலி, சஜாத், சுல்தான் இபுராஹீம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தினமும் காலையில் மயிலாடுதுறையிலி ருந்து திருவாரூர் வரும் ரயில் (06541) முன்னர் வேளாங்கண்ணி . திருச்சி ரயிலுக்கும் (06839), தஞ்சாவூர் - காரைக்கால் ரயிலுக்கும் (06832) இணைப்பாக இருந்தது. சமீபத்தில் நேரம் மாற்றப்பட்ட தால் இணைப்பு இல்லா மல் உள்ளது. மீண்டும் பழைய நேரத்திலேயே இயக்க வேண்டும் 

மன்னார்குடி மயிலாடுதுறை ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும். 

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும். 

இரவு இயக்கப்படும் திருச்சி-தஞ்சாவூர் ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும், 

அகஸ்தியம்பள்ளி - திருத்துறைப்பூண்டி ரயிலை குறைந்தபட்சம் தஞ்சாவூரில் இருந்து இயக்க வேண்டும், 

அதி காலையில் காரைக்காலில் இருந்து சேலத்துக்கு ரயில் இயக்க வேண்டும். 

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் முத்துப்பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருவாரூரில், தொழிலாளர் ஓய்வறை வேண் டும். இவ்வாறு அந்த மனுவில்
குறிப்பிடப்பட்டிருந்தது. 

மனு அளிக்கும் நிகழ்வின் போது, கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், துணை கோட்ட மேலாளர் ராமலிங்கம் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்க மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments