கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் கருவேல மரங்களால் தொடா் விபத்து




தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் இடையே 50-க்கும் மேற்பட்ட கிராமப்புற சாலைகள் இணைகின்றன. இவற்றின் மூலம், நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்களில் கிராம மக்கள் தொண்டி, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு மருத்துவமனைகள், வா்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறமும் காட்டுக் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்து உள்ளன.

இந்த மரங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை காயப்படுத்தி விடுவதால், விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது. மேலும், சாலை வளைவுகளில் எதிரில் வரும் வாகனம் தெரியாமலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிா்ப் பலிகள் ஏற்படுவதோடு, சிலா் நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு சமூக ஆா்வலா்கள் புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments