டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவ மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. பருவ மழை தொடங்கும் காலத்தில் ஏற்படும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் எஜிப்டி வகையைச் சேர்ந்த கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் கடிக்கும். கொசு கடித்து ஐந்தாறு நாட்களில் காய்சலுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.

இந்த கொசுக்கள் அருகில் உள்ள வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் தண்ணீரில் தான் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் முட்டைகளை இட்டு புழுக்கள் உருவாகி அதன் எண்ணிக்கையை பெருக்குகின்றன. எனவே, தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்வது ஒரு முக்கியமான அம்சமாகும். குப்பைகள் மற்றும் வீணாகும் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். எனவே, விவசாயிகள் தங்களின் வயல் மற்றும் வீடுகள் அருகே உள்ள பொது இடங்கள். ஆகியவற்றில் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு பெறுகுவதற்கு வாய்ப்புள்ள நீர்சூழல்களை நாம் தவிர்க்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.

எனவே மழைநீர் ஆங்காங்கே தேங்காமல் இருக்கும் பொருட்டு விவசாய நிலங்களில் உள்ள கொட்டாங்குச்சிகள். தென்னை மட்டை. ஓலைகள், பயன்படுத்தப்பட்ட இளநீர்காய்கள், ஆட்டுக்கல் உரல் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரில் டெங்குவை பரப்பும் கொசுவினுடைய புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே, மேற்கண்ட பொருட்கள் தேவையற்ற நிலையில் இருக்கும் பொழுது அதனை மட்ககூடிய வகையில் இருந்தால் எருக்குழிகளில் இட்டு மக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யலாம். அது பின் உரமாவதற்கு வாய்ப்பு உள்ளது.

தண்ணீர் தேங்கும் பாத்திரங்கள். உரல், ஆட்டுக்கல். டப்பாக்கள். பழைய பயனற்று இருக்கும் டப்பாக்கள் ஆகியவற்றை தலைகீழாக நீர் தேங்காமல் கவிழ்த்து வைக்கலாம். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, ஆகிய துறைகளில் உள்ள களப்பணியாளர்கள் கிராமங்களுக்கு செல்லும் பொழுது மேற்கண்டவாறு மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்திட கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்களுக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது

எனவே. விவசாயிகள். விவசாய பெருங்குடிமக்கள். பொதுமக்கள். விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் குடியிருப்பு பகுதியில் மற்றும் வயல்வெளி பகுதிகளில் தேவையற்றவாறு நீர்தேங்குவதனால் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால் மேற்கூறப்பட்ட வழிகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தங்கள் வயல்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள் வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுக்கள் முட்டையிடாதவாறு வலைகள் அல்லது மூடிகள் கொண்டு மூடி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள். விவசாய சங்க பிரதிநிதிகள். முன்னோடி விவசாயிகள் ஆகியோர்கள் தங்கள் கிராம அளவில் இந்த தகவலை பிற விவசாயிகளுக்கு கொண்டு செல்லுமாறும், கிராம அளவில் உள்ள பொது சுகாதாரத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை களப்பணியாளர்கள் கிராமங்களில் களப்பணி மேற்கொள்ளும் போது அவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று மாவட்டத்தில் டெங்கு கொசு பரவாத வகையில் பொதுமக்களுக்கும். விவசாயிகளுக்கும் ஏற்படும் இன்னல்களை தவிர்த்திட மிகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments