ஏம்பக்கோட்டை ரஹுமா பரக்கத் மதரஸாவில் ஆலிமாக்களுக்கான ஆசிரியர் பயிற்சி விளக்க முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா மீமிசல் ஏம்பக்கோட்டை கிராமத்தில் உள்ள மதரஸா ரஹுமா பரக் கத் நிஸ்வான் மதரஸாவில்  ஆலிமா பட்டம் பெற்ற  ஆலிமா ஆசிரியைகளுக்கு ஆசிரியர் பயிற்சி விளக்க முகாம் நிகழ்ச்சி  கடந்த 
16.09/2023  சனிக்கிழமை அன்று நடைபெற்றது

நிகழ்சியில் கடற்கறை மற்றும் அறந்தாங்கி  சுற்றுவட்டார பகுதியிலிருந்து 70 க்கும் மேற்பட்ட ஆலிமா பெண்கள் கலந்துகொண்டனர்

மதரஸாவின் தலைமை ஆசிரியர்  மௌலவி,பாஜில், காரி,அல்ஹாஜ்  M. J. முகமது மைதீன் தாவூதி அவர்கள்  வரவேற்புரை மற்றும் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.

சென்னை அன்வாருஸ்ஸுப்பா  மக்தப் கமிட்டியின் திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஜோனல் பொருப்பாளர் மௌலானா ஹாபிழ்  M நைனார் முகமது யூசுபி ஹஜரத் அவர்களும், திருச்சி மாவட்ட மக்தப் ஆய்வாளர்களான  பல உலமாக்களும்  கலந்து கொண்டு  பயிற்சி வகுப்பு நடத்தினர்

அதில் மக்தப் வரலாறு,மக்தப் அமைப்பு முறை, பாடத்திட்டம், கற்ப்பிக்கும் முறை,தஜ்வீத், உளவியல், ஸகூல் பாடத்திட்டம் போன்ற பல்வேறு விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது....

முகாமில் கலந்துகொண்ட அனைத்து ஆலிமாக்களுக்கும்  மதரஸாவின் நிறுவனர் ஹாஜி, N.S. அயூப்கான் அவர்களின் துணைவியார்  ஹாஜியா A .பரக்கத் நிஷா அவர்கள் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்கள்

இறுதியாக மதரஸாவின் வளர்ச்சிக்கும் மதரஸா நிறுவனர் அவர்களின் பெற்றோர்களுக்காக  யாஸீன் ஓதி துஆ செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments