புதுக்கோட்டையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
அதிரடி சோதனை
நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்த சம்பவத்தை தொடா்ந்து புதுக்கோட்டையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் நகரப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அருகே, பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகே, டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ளிட்ட இடங்களில் உள்ள அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் சமையல் செய்யும் இடம் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். மேலும் சிக்கன்களை தயார் செய்து வைத்திருந்ததையும் பார்த்தனர். மேலும் சவர்மா கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சாலையோர கடைகளிலும் சோதனையிட்டனர்.
கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
இந்த சோதனையின் போது கெட்டுப்போன சிக்கன்கள் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதில் சுமார் 30 கிலோ சிக்கன்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். மேலும் அதனை பினாயில் மற்றும் ஆசிட் ஊற்றி அழித்தனர்.
இதேபோல சவர்மா கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சாலையோரம் வைத்து சவர்மா விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர். ஒரு ஓட்டலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தொிவித்தனர். மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றனர். இந்த சோதனையின் போது நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.