அறந்தாங்கி அருகே செல்போனில் கேம்ஸ் விளையாடியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவன்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கூத்தங்குடி கிராமம் பச்சைக் கொல்லை பகுதியை சேர்ந்தவர் பெரிய்யா. விவசாயி. இவரது மகன் சரவணன் (வயது 14). இவர் பெருங்காடு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், சரவணன் நேற்று பள்ளியில் தேர்வு எழுதி விட்டு மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் படிக்காமல் செல்போன் மூலம் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது தாய் சத்தியா, அவரை கண்டித்துள்ளார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்த சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.