கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இது குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது
2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி, கடந்த சில மாதங்களுக்கு முன் மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்பட்டு ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார் என்றும் குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார் எனவும் அரசு அறிவித்தது.
ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் தலைவிகள் இதில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.
அதேபோல், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதை பெற முடியாது.
அதேபோல் சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள். ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப தலைவர்களும் இதை பெற முடியாது என அரசு அறிவித்தது.
இந்த விதிமுறைகளுடன் கடந்த ஜூலை 24 - ஆகஸ்டு 5 வரை முதல் கட்ட முகாம், ஆகஸ்டு 14 வரை 2 வது கட்ட முகாம், ஆகஸ்டு 18 முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் என மூன்று கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பி வைத்து, அது பல்வேறு கட்டங்களாக சரிபார்க்கப்பட்டு 1 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரம் மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கான SMS அனுப்பி வைக்கப்பட்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.