மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் திருமயம் ஊராட்சி தலைவர் சிக்கந்தர்: சொந்த செலவில் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் மேற்கூரை அமைப்பு பொதுமக்கள் பாராட்டு




புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஓலை குடிப்பட்டி கிராமத்தில் செல்வகணபதி, பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வெளிப்புறத்தில் பக்தர்கள் நின்று மழை மற்றும் வெயில் காலங்களில் வழிபடுவதற்கு ஏதுவாக இருக்க அப்பகுதி பொதுமக்கள் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் மேற்கூரை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த செலவில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் வெளிப்புற மேற்கூரை அமைத்துக் கொடுத்தார். இதையடுத்து அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கி திறந்து வைத்தார். தொடர்ந்து இதில் கலந்து கொண்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களின் ஊர் கோரிக்கையை உணர்ந்து உடனடியாக ஊராட்சி தலைவர் அதற்கு உதவி செய்த சிக்கந்தரின் செயல்பாடு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது என்று நெகிழ்ச்சி அடையும் விதத்தில் உள்ளது எனவும் கூறினர்.

 மேலும் இந்து கோவிலுக்கு இஸ்லாமிய சகோதரர் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரின் பணி மேலும் சிறக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments