புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக பொதுக்குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் சில்வர் ஹாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சவரிமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கதிரேசன் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் காமராஜ், பொன்னமராவதி வர்த்தக கழக தலைவர் பழனியப்பன், பேக்கரி மஹராஜ் அருண்ராஜ் சின்னப்பா, காளிமுத்து ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். திருவப்பூர் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து தொடங்கி கட்டுமான பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். புதுக்கோட்டையில் ஷேர் ஆட்டோக்களை இயக்கவும், நகரில் இருந்து மினி பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை ஜங்ஷன் ரெயில் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி துணை தலைவர் லியாகத் அலி, மாவட்ட கூடுதல் செயலாளர் சம்பத்குமார், முன்னாள் தலைவர் சேவியர், துணை தலைவர் ராஜா முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments