நாகப்பட்டினம் – தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழிச்சாலை திட்டம்: நில எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - RTI கேள்விக் நெடுஞ்சாலைத்துறை பதில்




நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை புதிதாக பசுமை நான்கு வழி கடற்கரைச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலைத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் உந்துசக்தி என்றே கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும், துறைமுகங்களை இணைக்கும் விதமாகவும் சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை நான்கு வழி கடற்கரை சாலை அமைக்கப்படுகிறது.

இதில், நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை புதிய 4 வழி பசுமை கடற்கரை சாலை அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 313 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கடற்கரைச் சாலை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய பசுமை நான்கு வழி கடற்கரை சாலையில் 37 பெரிய பாலங்களும், 55 சிறிய பாலங்களும், 690 நீர்நிலைகளுக்கான சிறிய கால்வாய் நீரோடை பாலங்களும், 47 சிறிய சாலைகளும், அமைக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தில் 90 விழுக்காடு பசுமைவழிச் சாலை என்பதால் விவசாயத்திற்கும், நீர் நிலைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதிக அளவில் பாலங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான விரிவான திட்டஅறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாரித்துள்ளது. இந்த சாலைத் திட்டம், பணிகள் முடிந்து செயல்வடிவம் பெறும்போது தொழிற்சாலைகள் விரைவான வளர்ச்சி அடையும் என கூறுகின்றனர் தொழிற்துறையினர்.

மேலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பசுமை வழிச்சாலையால் பெரிய அளவில் பயன் பெறுவார்கள், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்வதற்கு இந்த புதிய நான்கு வழிச்சாலை ஒரு மாற்று வழிப் பாதையாகயும் அமையும் என இந்திய தொழில் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலா் அரவிந்த்குமாா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் தகவல் கோரியிருந்தாா்.
 
நாகப்பட்டினம் – தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழிச்சாலை திட்டத்தில்
நில எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை -  RTI கேள்விக் நெடுஞ்சாலைத்துறை பதில் அளித்துள்ளது.

News Credit: Nagai Aravind Kumar 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments