மீமிசல் அருகே முத்துகுடாவில் சுற்றுலா தலமாக மாற்றும் பணி மும்முரம் 18 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றம்




மீமிசல் அருகே முத்துகுடாவில் சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என 18 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து திமுக அரசு முத்துகுடா சுற்றுலா தளமாக அறிவித்து பணி தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசகுடி ஊராட்சியில் கடல் பகுதியையொட்டி முத்துகுடா என்ற இடம் உள்ளது.

இந்த இடத்திற்கு அருகே கடலுக்குள் அலயாத்திகாட்டை அமைந்துள்ளது. இந்த அலயாத்திகாட்டில் உள்ள மரங்களில் பல்வேறு விதமான பறவைகள் வந்து தங்கி செல்வதாகவும், வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் ஆவுடையார்கோவில் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் வழியாக படகில் அலயாத்தி காட்டிற்கு வந்து சுற்றி பார்த்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் முத்துகுடாவை சுற்றுலா தளமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முத்துகுடா இருப்பதால் அறந்தாங்கி எம்எல்ஏ ராமசந்திரன் முத்துகுடாவை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். என சட்டசபையில் பேசி அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து தமிழக அரசு பரிசிலினை செய்து அறந்தாங்கி தொகுதியில் உள்ள முத்துகுடாவில் சுற்றுலா தளம் அமைக்க முதல் கட்டமாக சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணி தற்போது முத்துகுடாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிதியில் இருந்து முத்துகுடாவில் சுற்றுலா பயணிகள் வந்தால் தங்க ஒரு கட்டிடமும், சுற்றுலா பயணிகள் இருக்க இருக்கைகள், அலுவலகம், ஆழ்குழாய் கிணறு, மேலும் அலையாத்திகாடுக்கு படகு செல்ல வழி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள் அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாட்டாணி புரசகுடி ஊராட்சி தலைவர் சீதாலெட்சுமி பஷீர் கூறியதாவது: 

முத்துகுடாவை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள் கடந்த 18 வருடங்களாக அரசு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இப்பகுதி பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கை இப்போது நிறைவேறி உள்ளது தமிழ்அரசு சுற்றுலாத்துறை சார்பில் அடுத்த கட்ட நிதி ஒதுக்கீடு செய்து சாலைகளை சரி செய்ய வேண்டும் என கூறினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments