எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இரு முறை நிரந்தர இரயில் சேவைக்கு கேரளா & தமிழகத்தில் வரவேற்பு அளித்தனர்
கேரளாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்காவுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக வாரந்திர சிறப்பு ரயிலாக இயங்கி வந்தது
25.9.0203 திங்கட்கிழமை எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இரு முறை விரைவு நிரந்தர ரயில் சேவை தொடங்கியது
26.9 .2023 செவ்வாய்கிழமை வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இரு முறை விரைவு நிரந்தர ரயில் சேவை தொடங்கியது
இதில் கேரளா & தமிழகத்தில் ரயில் சங்கங்கள் சார்பில் சில இடங்களில் வரவேற்பு அளித்தனர்.
லோக பைலட் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண்:16361)
வண்டி எண் 16361 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை & திங்கட்கிழமை பகல் 1.00 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
வேளாங்கண்ணி- எர்ணாகுளம் (வண்டி எண் : 16312)
மறுமார்க்கத்தில் வண்டி எண் 16362 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை & புதன்கிழமை பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயில் எங்கெங்கு நின்று செல்லும்?
கேரளா பகுதி 👇
எர்ணாகுளம்
கோட்டையம்,
செங்கனாசேரி,
திர்வல்லா,
செங்கனூர்,
மவெலிகரா,
காயங்குளம்,
கருநாகப்பள்ளி ,
சாஸ்தன்கோட்டா,
கொல்லம்,
குந்தரா,
கொட்டாரகர,
அவனீஸ்வரம்
புணலூர்,
தென்மலை,
தமிழ்நாடு பகுதி 👇
செங்கோட்டை,
தென்காசி
கடையநல்லூர்,
சங்கரன்கோவில்,
ராஜபாளையம்,
சிவகாசி,
விருதுநகர்,
அருப்புக்கோட்டை,
மானாமதுரை,
காரைக்குடி,
அறந்தாங்கி,
பேராவூரணி,
பட்டுக்கோட்டை,,
அதிராம்பட்டினம்,
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
வேளாங்கண்ணி
ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிகளின் எண்ணிக்கை:
ஸ்லீப்பர்: 7
3 ஏ/சி: 2
2 ஏ/சி:1
பொது: 4
என மொத்தம் 14 பெட்டிகளோடு இயக்கப்படும்.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- எர்ணாகுளம் ரயில் மூலம் இருந்து எளிதில் செல்லக்கூடிய முக்கிய இடங்கள்:
1. குற்றாலம் :
குற்றாலம் சொல்வோர் தென்காசி ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் குற்றாலம் உள்ளது.
2. கொச்சி விமான நிலையம்:
கொச்சி விமான நிலையம் செல்வோர் (ஹஜ் செல்வோர், கொச்சி வழியாக அரபு நாடு செல்வோர்) எர்ணாக்குளம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மெட்ரோ ரயிலில் ஆலுவா மெட்ரோ நிலையம் சென்று அங்கிருந்து விமான நிலையம் செல்லலாம். அல்லது எர்ணாக்குளம் ரயில்நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு நேரடி பேருந்து வசதிகளும் உள்ளது.
3. திருவனந்தபுரம் விமான நிலையம்
திருவனந்தபுரம் விமான நிலையம் செல்வோர் கொல்லம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் பாசஞ்சர் ரயிலில் அல்லது பேருந்தில் திருவனந்தபுரம் விமான நலையம் செல்லலாம்.
4. தென்மாவட்டங்கள் :
மேலும் தென்மாவட்டங்கள் செல்வார் விருதுநகரில் இறங்கி சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் மூலமாக திருச்செந்தூர் செல்லலாம், சென்னை எழும்பூர் - தூத்துக்குடி செந்தூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மூலமாக சாத்தூர் கோவில்பட்டி தூத்துக்குடி செல்லலாம்,
பெங்களூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மூலமாக திருநெல்வேலி, நாகர்காவில் செல்லலாம். சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மூலமாக திருநெல்வேலி நாகர்கோவில் கன்னியாகுமரி செல்லலாம். சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலமாக திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்லலாம்.
5. முக்கிய சுற்றுலா இடங்கள் :
தென்மலை சுற்றுலா செல்வோர் தென்மலை ரயில் நிலையத்தில் இறங்கி கொள்ளலாம். கொல்லம் படகு சவாரி, வர்க்கலா கடற்கரை, எடவா, ஜத்தயு பாறை கற்றுலா செல்வோர் கொல்லம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். குமரகோம் படகு சவாரி செல்வோர், வாகமான் மலை பிரதேசம் செல்வார், மூணார் மலை பிரதேசம் செல்வார் கோட்டயம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலா செல்வோர் எர்ணாக்குளம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
6. நாகூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி:
அதிகாலையில் நமது பகுதியிலிருந்து நாகூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சென்று மாலை வீடு திரும்புவோரும் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.