இலங்கை கடற்படையினரால் படகுகள் பறிமுதல்: 3 மீனவர்களுக்கு ரூ.11½ லட்சம் நிவாரணம் கலெக்டர் வழங்கினார்




புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் சில விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படைத்தளங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 2 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும், நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1½ லட்சம் என மொத்தம் ரூ.11½ லட்சம் வழங்கிட ஆணையிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மணமேல்குடி தாலுகாவை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் முருகேஸ்வரி, மரிய சாமுவேல், நாட்டுப்படகு உரிமையாளர் ஜெயஇருதயம் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று வழங்கினார். இந்தநிகழ்வில், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செய்யது முகம்மது, துணை இயக்குனர் (மீன்வளத்துறை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments