கோபாலப்பட்டிணம் அம்மாப்பட்டிணம் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை, மணமேல்குடி சீனியார் அன்பறிவகம் ஏற்பாட்டில் 01-10-2023 பனை விதை நடும் நெடும் பணி தொடக்க நிகழ்ச்சி




கோபாலப்பட்டிணம் அம்மாப்பட்டிணம் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை, மணமேல்குடி சீனியார் அன்பறிவகம் ஏற்பாட்டில் 01-10-2023 பனை விதை நடும் நெடும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது 

1 கோடி பனைவிதை நடும் நெடும் பணி புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில்  அமரடக்கி புன்னகை அறக்கட்டளை, மணமேல்குடி சீனியார் அன்பறிவகம்  இணைந்து 43 கிலோ மீட்டர் தொலைவில்  பனைவிதை நடும் நிகழ்வு நடை பெற உள்ளது 
கோபாலப்பட்டிணம் அம்மாப்பட்டிணம்
இரண்டு இடங்களில் தொடக்க விழா நடைபெறுகிறது

அக்டோபர் 1 ஞாயிறு 9.00 மணியளவில்
ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்வுக்கு மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி B.Sc.,BL., அவர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பங்கேற்று மணமேல்குடி தாலுகா அம்மாபட்டினத்தில் நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார்கள். மேலும் சில இடங்களை பார்வையிட உள்ளார்கள்

மேலும் ஆவுடையார் கோவில் ஒன்றியம்
கோபாலா பட்டினம் மீமிசல் நிகழ்ச்சி யை துவக்கிவைக்க உள்ளார்கள்,

மாண்புமிகு சுற்றுச்சூழல்அமைச்சர், திரு.மெய்யநாதன் சார் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST. இராமச்சந்திரன் அவர்கள் தொடங்கிவைக்க உள்ளார்...

இந்நிகழ்ச்சியை அமரடக்கி புன்னகை அறக்கட்டளை,திமுக சுற்றுச்சூழல் அணி, சீனியார் அன்பறிவகம், ஏற்பாடு செய்துள்ளது 

மணமேல்குடி சீனியார் அன்பறிவகம் &  அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில்  புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை ஓரங்களில்பனை விதைகள் நட இருக்கும் இடங்கள்:  43 கிலோ மீட்டர் தொலைவில்

1.கட்டுமாவடி
2.கிருஷ்ணாஜிப்பட்டினம்
3.கண்டனிவயல்
4.மும்பாலை
5.மணமேல்குடி
6.ஆவுடையார்பட்டினம்

7.அம்மாப்பட்டினம் தொடங்கும் இடம்

8.வன்னிச்சிப்பட்டினம்
9.கோட்டைப்பட்டினம்
10.பாலக்குடி
11.குமரப்பன்வயல் 

12.கோபாலப்பட்டினம்  தொடங்கும் இடம்

13.சேமங்கோட்டை
14.முத்துகுடா.

கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை

தன்னார்வலர்கள்,.அனைவரும் கலந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு நட்டு வைப்போம்  பனை விதைகளை
ஆ.சே. கலை பிரபு
நிறுவனத் தலைவர்
புன்னகை அறக்கட்டளை அமரடக்கி 
8838536394





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments