ஒன்றிய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்தக்கூடாது என அறந்தாங்கி ஆட்டோ தொழிலாளர்கள் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆட்டோ தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம் நகரத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.
நகரச் செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். சங்க கெளரவ தலைவர் சிஐடியூ ராஜேந்திரன், தங்கராசு, கருணா, நாராயணமூர்த்தி, கணேசன், ஏஐடியூசி அஜய்குமார்கோஷ், ராதாகிருஷ்ணன்,பாண்டியராஜன் உள்ளிட்ட கிளை சங்க நிர்வாகிகள் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரத்தில் தொடர்ந்து ஒற்றுமைக்கு எதிராக சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்லைன் அபதார முறையை கைவிட வேண்டும். எப்சிக்கு செல்லும் ஆட்டோவிற்கு புகைச்சான்று மற்றும் ஸ்டிக்கர்களுக்கு அநியாய கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசு நிறைவேற்றிய மோட்டார் வாகன சட்டத்திருத்ததை தமிழகத்தில் அமுல்படுத்தக்கூடாது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அறந்தாங்கி செக்போஸ்டில்லிருந்து ஆட்டோவில் ஊர்வலமாக சென்று கோட்டாட்சி தலைவரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.