சர்வதேச தரத்தில், 120கோடி மதிப்பீட்டில், மன்னார்குடி - தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை(SH-63) சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் கும்பகோணம் கோட்டம் மற்றும் மன்னார்குடி உட்கோட்டம் மூலம் தஞ்சாவூர்- மன்னார்குடி மாநில நெடுஞ்சாலை (எஸ்.எச்.63) அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மன்னார்குடி அருகே மேலவாசல் பகுதியில் தொடங்கி செருமங்கலம், காரக்கோட்டை, எடமேலையூர், வடுவூர், நெய்வாசல், வாண்டையார் இருப்பு வழியாக தஞ்சை வரை சாலை அகலப்படுத்தும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்ற வருகிறது.

சர்வதேச தரத்தில், 120கோடி மதிப்பீட்டில், மன்னார்குடி - தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை(SH-63) சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் TRB ராஜா அவர்களால் பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட இச்சாலை பணிகள் நிறைவுபெற்று மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களால் விரைவில் முறைப்படி திறந்து வைக்கப்பட உள்ளது.

சாலையின் இரு புறங்களிலும மரங்கள் வைக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுளது...

தண்ணீர் வடிகால் அமைப்புகள்  சிறப்பு..


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments