சாலையை சீரமைக்கக் கோரி ஆவுடையாா்கோவில் வட்டாட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டம்




பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரி, ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் இருந்து குளத்துக் குடியிருப்பு, பெருநாவலூா் வழியாக காரைக்குடி மற்றும் அறந்தாங்கி செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவில் உள்ளது. இந்தச் சாலையை சீரமைத்துத் தரக் கோரி, அப்பகுதி மக்கள் பல முறை போராட்டம் நடத்தியும் சாலை செப்பனிட்டுத் தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் சி. சுப்பிரமணியன் தலைமையில் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினா் செல்வராஜ்,

காா்த்திகேயன், மணிமுத்து உள்ளிட்டோா் புதன்கிழமை திடீரென ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கூடி அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். வரும் ஜனவரி மாதத்துக்குள் இச்சாலை செப்பனிட்டு தருவதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments