திருச்சி விமான நிலையத்தின் தற்போதைய நிலை என்ன?




திருச்சியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தின் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இந்த ஆண்டின் இறுதியில் விமானநிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்சியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் உள்ளது. இந்த திருச்சி விமான நிலையத்தை திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
உள்நாடு மற்றும் வெளிநாடு

திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இன்றளவும் டிக்கெட் அனைத்தும் புக் செய்யப்பட்டுள்ளன.

​75 ஆயிரம் சதுர மீட்டர்

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வந்தது. இதில் 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 1200 கோடி செலவில் இந்த புதிய விமான முனையமானது கட்டப்பட்டு வருகிறது.

​நவீன வசதிகள்
ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய விமான முனையமானது கட்டப்பட்டு வருகிறது. இதில் லக்கேஜ்களுக்கான கன்வேயர் பெல்ட்டுகளுடன் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையமானது கடந்த 2 மாதங்களுக்கு முன்பே திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திறப்பு தேதி தள்ளிப்போனது.

​ஆண்டு இறுதியில் திறப்பு

இந்நிலையில் இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு...விமான நிலையத்தின் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தனர். தற்போது 93 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமான நிலையமானது திறக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

​மக்கள் எதிர்பார்ப்பு 

திருச்சி விமான நிலையத்தின் பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்தே மக்கள் அனைவரும் விமான நிலையத்தின் திறப்பிற்காக காத்துக்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments