கடந்த சில நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரம் - அஜ்மீர் வாரந்திர ஹம்சாபர் ரயிலை ஜெய்ப்பூர் வழியாக ஃபெரோஸ்பூர் வரை நீட்டிக்கப்பட்டது
இராமேஸ்வரம் - ஃபெரோஸ்பூர்
வண்டி எண் 20974 இராமேஸ்வரம் - ஃபெரோஸ்பூர் ஹம்சாபர் வாரந்திர அதி விரைவு ரயில் ஒவ்வொரு வாரமும் இராமேஸ்வரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை மதியம் 01.30 மணிக்கு ஃபெரோஸ்பூர் கன்டோண்மென்ட் வந்தடையும்.
20974 இராமேஸ்வரம் - பெரோஸ்பூர் ஹம்சபர் அதிவிரைவு ரயில் 03/10/2023 முதல் பெரோஸ்பூர் வரை செல்கிறது.
ஃபெரோஸ்பூர் - இராமேஸ்வரம்
மறுமார்க்கமாக ஃபெரோஸ்பூரில் இருந்து இருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 5.55 மணிக்கு புறப்படும் ரயில் திங்கட்கிழமை 11.00 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.
20973 பெரோஸ்பூர் - இராமேஸ்வரம் ஹம்சபர் அதிவிரைவு ரயில் 07/10/2023 முதல் பெரோஸ்பூரில் இருந்து இயங்கிறது.
வழி & நிறுத்தம்
இந்த ரயில்கள் மானாமதுரை திருச்சி விழுப்புரம் செங்கல்பட்டு சென்னை எழும்பூர், விஜயாவாடா பல்ஹர்சா, நாக்பூர், போபால், இந்தூர் அஜ்மீர் ஜெய்ப்பூர் வழியாக இயங்கி வருகிறது
பெரோஸ்பூர் - இராமேஸ்வரம் வாரந்திர ஹம்சாபர் அதிவிரைவு ரயில் தமிழ்நாட்டில் பொறுத்தவரை
சென்னை எழும்பூர்
செங்கல்பட்டு
விழுப்புரம்
அரியலூர்
திருச்சி
புதுக்கோட்டை
மானாமதுரை
இராமநாதபுரம்
மண்டபம்
இராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்கள் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும்
இராமேஸ்வரம் பாம்பன் பாலம்
குறிப்பு : இந்த ரயில் தற்போது புதிய பாம்பன் ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஃபெரோஸ்பூர் (பாகிஸ்தான் எல்லை)
பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஃபெரோஸ்பூர் அமைந்துள்ளது
ஃபெரோஸ்பூரில் இருந்து சாலை மார்க்கமாக வெறும் 15 கீலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் அமைந்துள்ளது
இராமேஸ்வரம் (இலங்கை எல்லை)
இலங்கையின் எல்லையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமேஸ்வரம் அமைந்துள்ளது
இராமேஸ்வரத்தில் இருந்து கடல் மார்க்கமாக வெறும் 30 கீலோ மீட்டர் தொலைவில் இலங்கை அமைந்துள்ளது
இந்தியாவில் 8 மாநிலங்கள் கடந்து செல்லும் ரயில்
ஃபெரோஸ்பூர் - இராமேஸ்வரம் ஹம்சாபர் வாரந்திர அதிவிரைவு ரயில் பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்டிரா தெலுங்கானா ஆந்திரா பிரதேசம் தமிழ்நாடு 8 மாநிலங்கை கடந்து பயணிக்கிறது..
மொத்தத்தில் இரண்டு நாடுகள் எல்லைகள் 8 மாநிலங்கள் கடந்து பயணிக்கும் ரயிலாக அமைந்துள்ளது ஃபெரோஸ்பூர் - இராமேஸ்வரம் ஹம்சாபர் வாரந்திர அதிவிரைவு ரயில்
PC Credit : Pudukottai Rail Users, & Sibi Kumar Vlogs & Siva Prakash Railway Update
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.