சிறந்த குருதி கொடை விருது அமரடக்கி புன்னகை அறக்கட்டளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பாராட்டு
சிறந்த குருதி கொடை விருது  அமரடக்கி புன்னகை அறக்கட்டளை   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார் 

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை  முன்னிட்டு  ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை   மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது

அறந்தாங்கி அடுத்து அமரடக்கி  புன்னகை  அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் இரத்ததான  சிறப்பான சேவையை பாராட்டி  அமரடக்கி புன்னகை அறக்கட்டளை குழுவினர்களுக்கும், மற்றும் நிறுவனர் மாநிலதலைவர் ஆ.சே. கலைபிரபு , மற்றும்  மாவட்டகுருதிக் கொடை மாவட்ட தலைவர் அரிமழம்திரு.இராமர் இருவர்கள்  தொடர்ந்து மூன்று முறை இரத்தம் தானம் செய்ததற்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி.மெர்சி ரம்யா IASஅவர்களின்  கரங்களால் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது , இந்த விருதை சக குருதிக் கொடையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் , தோழமை அமைப்புகள், அனைத்து கட்சி குருதிக் கொடையாளர்கள்

அனைவருக்கும் சமர்ப்பணம்! புன்னகை அறக்கட்டளை சார்பில் நிறுவனர் ஆ.சே.கலை பிரபு, அறந்தாங்கி  ஒன்றியதலைவர் திரு. வடிவீஸ்வரன்    பெற்றுக் கொண்டனர்

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர் ச. ராம் கணேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments