புதுக்கோட்டையில் சாலைகளில் சுற்றித்திரிந்த 78 மாடுகளை பிடித்து அபராதம் விதிப்பு




சாலைகளில் சுற்றித்திரிந்த 78 மாடுகளை பிடித்து நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை, புதிய பஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இது வாடிக்கையாக தொடர்ந்து வந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

78 மாடுகளை பிடித்தனர்

இந்நிலையில் இன்று புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை, பிருந்தாவனம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த 78 மாடுகளை பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட மாடுகளை நகர்மன்ற வளாகத்தில் அடைத்தனர்.


மேலும் மாடுகளின் உரிமையாளர்களிடம் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தும், இனிமேல் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டு மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments