தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு




தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி வட மாநிலங்களில் பெய்தது. தமிழகத்திலும் பரவலாக மழை பெய்ததால் தண்ணீர் பிரச்சனை ஏற்படவில்லை.

ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. 4 மாத காலத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதியில் இருந்து கடந்த 10-ந்தேதி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்: கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரம்.. பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது
இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக உருவாகி உள்ளது. இதற்கிடையில் வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது 23-ந் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தொடங்கியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் அடையாளமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் லேசான மழையும் ஒருசில நேரங்களில் கனமழையும் பெய்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments