கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் வெளுத்து வாங்கிய பருவ மழை




கோபால்ப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது 

தென்கிழக்கு, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், கடல் காற்றும் பலமாக வீசி வருகிறது. 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல பகுதியில் நேற்று முன்தினம் அக்டோபர் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மழை வெளுத்து வாங்கியது வெப்பம் தணிந்து  கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது. 

இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது.

தற்போது பெய்த  மழையினால்  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 கோபால்ப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் இரண்டு குளங்களிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.. மழை பெய்து குளங்கள் எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.















PC Credit : Mohamed Niyas

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments