அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புது பொலிவு பெற இருக்கும் புதுக்கோட்டை ரயில் நிலையம்




அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை இரயில் நிலையம் மேம்படுத்தப்பட்ட உள்ளது. அதன்படி, விரைவில் புதிய வசதிகள் மற்றும் அம்சங்களுடன் இரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்து

ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் போக்குவரத்து மிகவும் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. சாலைப் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இதில், ரயில்வே போக்குவரத்து மூலமாக மக்கள் எளிதில் பாதுகாப்பாக குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். கழிப்பறை வசதி மற்றும் வசதியான படுக்கை வசதி இருப்பதால், நோயாளிகள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது.
அதுபோல சரக்கு போக்குவரத்துகள் குறைந்த செலவில் நீண்ட தூரத்திற்கு அதிக அளவில் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கிறது.

ரயில் போக்குவரத்தினால் சாலை விபத்துகள் குறையவும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும் அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, ரயில் போக்குவரத்தை இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் அறிஞர்களும், பொதுமக்களும் விரும்புகிறார்கள்.

அம்ரித் பாரத்

நாடு முழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்ரித் பாரத் எனும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் படுகிறது. 

மதுரை கோட்ட ரெயில்வேயில் 15 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. அதில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் ஒன்று. இதில் பயணிகளுக்கான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிவறை, பார்க்கிங் வசதி, ரெயில்வே நடைபாதை மேம்பாலம் கூடுதலாக அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆய்வுக்கு பின் வரைபடம் தீட்டப்பட்டு முடிவு செய்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது வருகிற ஜனவரி மாதத்திற்குள் முதல்கட்டமாக பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments