நம்ம ஊரு GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது 5 ஆண்டில் என்ன செய்தார்கள்? வாங்க பார்ப்போம்!!




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமுக அறக்கட்டளை சார்பாக  நமது சுற்றுவட்டார பொதுமக்களுக்காக  19.10.2019 சனிக்கிழமை மாலை  MKR ராசி திருமண மண்டபத்தில் இராமநாதபுரம் பாரளுமன்ற உறுப்பினர் க. நவாஸ் கனி MP அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அவசரகால ஊர்தி ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

துவக்கி வைக்கப்பட்ட நாள் 19.10.2019 முதல் 27.10.2023 இன்று வரை சுமார் 450-க்கும்  மேற்பட்ட நோயாளிகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் (சென்னை,பாண்டிச்சேரி,கோயமுத்தூர்,சேலம், மதுரை,தஞ்சாவூர், வேலூர்,திருச்சி) ஆகிய பெரு நகரங்களுக்கு நோயாளிகளை ஏற்றி சென்று தனது உயிர்காக்கும் உன்னத சேவையை இந்த GPM மக்கள் மேடை அவசரகால ஊர்தி ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகின்றன.இந்த GPM மக்கள் மேடை அவசரகால ஊர்தி ஆம்புலன்ஸ் மிகவும் பொருளாதார பின்தங்கிய நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இது அனைத்து மக்களுக்கான ஆம்புலன்ஸ்க்காக சுற்று வட்டார மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த GPM மக்கள் மேடை உறுப்பினர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியில்   ஆம்புலன்ஸ் சேவையை செய்து வருகின்றன.

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய  கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயினால்  பல மக்கள்கள் பாதிக்கப்பட்டனர் அந்த நேரத்தில் சுற்றுவட்டார மக்களுக்கு உதவிய GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் சேவையை நிறுத்தாமல் உயிருக்கு அஞ்சாமலும் இரவு பகல் பாராமல் பல நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றி உள்ளன இக்கட்டான பல நேரங்களில் தங்களது சேவையை இந்த GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் சேவைகளை செய்து வருகின்றன. 

 மென்மேலும் உங்களுடைய பணிகளும் சேவைகளும் தொடர்ந்து சுற்றுவட்டார மக்களுக்கு தொடர்ந்து செய்திட GPM மீடியா சார்பாக மனதார வாழ்த்துக்கிறோம்









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments