குமாரமங்களம், நா.புரசக்குடி கிராமங்களில் பழுதடைந்த சாலைைய சீரமைக்க கோரிக்கை
ஆவுடையார்கோவிலுக்குட்பட்ட பொன்பேத்தி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் குமாரமங்களம், நா.புரசக்குடி கிராமங்களில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக இந்த சாலையில் செல்லும்போது டயர் அடிக்கடி பஞ்சராகி விடுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிள், இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments