மணமேல்குடி ஒன்றியத்தில் 9 மற்றும் 10 ம் வகுப்பு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சமூக அறிவியல் பாடத்திற்கு பயிற்சி
மணமேல்குடி ஒன்றியத்தில் 9 மற்றும் 10 ம் வகுப்பு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சமூக அறிவியல் பாடத்திற்கு பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி

28-10-2023 அன்று  சமூக அறிவியல் பாடத்திற்கான பயிற்சியினை மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் திருமதி அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். 

இப் பயிற்சியில் சமூக அறிவியல் பாடத்தில் மதிப்பீடுகளின் நோக்கம், தேசிய அடைவு ஆய்வு அடிப்படையிலான மதிப்பீடுகள் , பாடநூல் வினாக்களுக்கும் தேசிய அடைவு ஆய்வு வினாக்களுக்கும் உள்ள வேறுபாடுகள்,
புளூமின் வகை பிரித்தல் மற்றும் திறன் அடிப்படையிலான கேள்விகளை உருவாக்குதல் போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியின் கருத்தாளர்கள் திருமதி 
 ரூத் பிரின்சஸ் அறிவொளி மற்றும் திரு சண்முகநாதன் ஆகியோர் செயல்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments