கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மிதமான மழை






கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது 

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.  

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  அக்டோபர் 30 அதிகாலை முதல் தீடீரென கருமேகங்கள் சூழ்ந்து  வெப்பம் தணிந்து  மிதமான மழை பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது. 

இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது.

தற்போது பெய்த  மழையினால்  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 கோபால்ப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் இரண்டு குளங்களிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.. மழை பெய்து குளங்கள் எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments