நடப்பாண்டில் விவசாயிகளுக்கு இலவசமாக 2 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு




நடப்பாண்டில் விவசாயிகளுக்கு இலவசமாக 2 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலவச மரக்கன்றுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் காடுகளை உருவாக்க திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டில் இத்திட்டத்தில் 2 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கிட இலக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே, தற்போது பெறப்படும் மழையினை பயன்படுத்தி விவசாயிகள் குழி எடுத்து மரக்கன்றுகளை நட்டு பயன் பெறலாம்.

இலவச மரக்கன்றுகள் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு, இத்திட்டத்தில் பதிவு செய்ய தேவையான ஆவணங்களுடன் (ஆதார் நகல், புகைப்படம், சிட்டா மற்றும் வங்கி புத்தக நகல்) தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி மரக்கன்றுகள் குறித்த விவரத்தினை பெற்று பயன்பெறலாம்.

இணையதளம்

தமிழ் மண்வளம் இணையதளத்தில் பயிர் சாகுபடிக்கான உரப்பரிந்துரை, தமிழ்நாடு அரசால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்ட இணைய தளம் தான் தமிழ் மண் வளம். மண்ணின் வளத்தினை உறுதி செய்யும் காரணிகளான உப்பின் நிலை, கார அமில நிலை, சுண்ணாம்பு நிலை, மண்ணின் நயம் ஆகிய விவரங்களையும், மண்ணில் உள்ள பேரூட்டச் சத்துக்கள், இரண்டாம் நிலை சத்துக்கள், நுண்சத்துக்கள் ஆகியவற்றின் இருப்பு நிலை ஆகியவற்றை விவசாயிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக தமிழ் மண்வளம் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் http;//tnagriculture.in/manvalam என்ற தமிழ் மண்வள இணையதளத்திற்குள் சென்று பார்வையிடலாம். தற்போது மண்வள அமைப்பானது உழவன் செயலியிலும் கொடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments