சம்பா நெல் சாகுபடி: பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்
சம்பா நெல் சாகுபடியில் பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாளாகும்.

சம்பா நெல் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்காக பல இடங்களில் நாற்று நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முடிய நெல் 23 ஆயிரத்து 894 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கு காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து வருவாய் இழப்பினை ஈடு செய்துகொள்ள பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு பதிவு செய்து பயனடையுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

15-ந் தேதி கடைசி நாள்

ஏக்கருக்கு விவசாயிகள் பிரீமியம் தொகையாக ரூ.513 செலுத்தி காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 15-ந் தேதி ஆகும். அதற்குள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள்ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பயிர் காப்பீடு பதிவு செய்யலாம்.

பயிர் காப்பீடு பதிவின் போது அடங்கல் (நெல்-II), சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், முன்மொழிவு படிவம், பதிவு படிவம் முதலிய ஆவணங்களை வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments