கட்டுமாவடியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம்
கட்டுமாவடியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2-ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பெரியமாடு, சின்னமாடு, கரிச்சான்மாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 111 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பரிசு

பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கோப்பையுடன் தென்னங்கன்று வழங்கப்பட்டது.

பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். மணமேல்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments