பல்வேறு கட்டபோராட்டங்களுக்கு பிறகு கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக சீமை கருவேல மரங்கள் மற்றும் குப்பைகள் அகற்றம்
கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக சீமை கருவேல மரங்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் நட்டாணிபுரசகுடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் முக்கியமான சாலையின் இருபுறங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்கள் மிகவும் அடர்த்தியாக வளர்ந்து  இருந்தது 

இந்நிலையில் 30-10-2023 திங்கட்கிழமை  ஜேசிபி(JCB) இயந்திரத்தின் மூலமாக சாலையின் இருபுறமும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி சாலையை விரிவுபடுத்தினார். மேலும் அந்த பகுதியில் கிடந்த குப்பைகள் மற்றும் கோபாலப்பட்டிணம் சில பகுதிகளில் குவிந்திருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. 

 * காவல் நிலையம் காட்டுக்குளம் சாலை

* ஸ்டேட் பாங்க் சாலை

 * ஈத்கா மைதானம் சாலை 

பல்வேறு பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு நாட்டாணி புரசக் கொடி ஊராட்சி நிர்வாகம் இந்த சீரமைப்பு பனிகளை  மேற்கொண்டுள்ளது

6


 அதேபோல் கடந்த நாட்களில் குப்பைகளை சரி செய்ய கோரியும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் கோபால பட்டினம் பொதுமக்கள் மற்றும் சிபிஐ கட்சி சார்பாக ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதுஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments