கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 01 கிராம சபை கூட்டம்


கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு  நவம்பர் 01 கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது 

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா I.A.S வெளியிட்டுள்ள அறிக்கையில் 

உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல், இணையவழி வீட்டுவரி, சொத்துவரி செலுத்துதல் மற்றும் இதர பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன. அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக  ஊராட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள  கிராம சபை கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு  கிராம சபைக் கூட்டம் 01.11.2023 காலை 11.00 மணியளவில் கோபாலப்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  கட்டிடம் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,BEd., தலைமையிலும்,  நடைபெறவுள்ளது. 

கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 

இதில் அரசு அதிகாரிகள் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்

பொதுமக்கள் இளைஞர்கள் முதியவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
 
நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

ரா.சீதாலெட்சுமி MSc,BEd.,
ஊராட்சி மன்ற தலைவர்,

உதயம் அபுதாஹீர், 
ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

வார்டு உறுப்பினர்கள்:

EM.சித்தி நிஜாமியா,
A.அபுதாஹீர்,
A.மும்தாஜ்பேகம், 
R.ரஜபுநிஜா,
S.பெனாசீர் பேகம் 
A. சாதிக் பாட்ஷா,
M. அன்வர் பாட்ஷா, 
R. மல்லிகா, 
G.சிங்காரி, 
S.லெத்திப், 
S.பிரேமா

நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:

1.கோபாலப்பட்டிணம் 
2.கணபதிப்பட்டிணம் 
3.குறிச்சிவயல்
4.முத்துக்குடா (மீனவர்) 
5.நாட்டாணி
6.ஆர்.புதுப்பட்டினம் (மீனவர்) 
7.ஆர்.புதுப்பட்டினம் (முஸ்லீம்) 
8.முத்துக்குடா (முஸ்லீம்) 
9.அண்டியப்பன்காடு 
10.கூடலூர் 
11. பாதரக்குடி 
12. புரசக்குடி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments