இந்தியா - வங்காளதேசம் இடையே புதிய ரயில் சேவை & புதிய ரயில் பாதை கூட்டாக இணைந்து 3 திட்டங்களைத் தொடங்கி வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா




இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்துக்கும் இடையே சுமுக உறவு நீடித்து வருகிறது. இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கிலோமீட்டருக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு இன்று ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து காணொலி காட்சி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.


வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலா முதல் வங்க தேசத்தின் அகவுரா வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு அகர்தலா -அகவுரா எல்லை தாண்டிய இணைப்பு ரயில் சேவை (Agartala-Akhaura Cross Border Rail Link Project) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி 5 கிலோமீட்டர் தூரம் இந்தியாவிலும், 10 கிலோமீட்டர் தூரம் வங்கதேசத்திலும் இருப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் (Nischintapur) சர்வதேச குடியேற்ற மைய ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகர்தலா -அகவுரா ரயில் சேவையுடன் சேர்த்து குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை, மைத்ரி சூப்பர் அனல்மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments